கருமந்துறை ஐ.டி.ஐ.யில் நேரடி மாணவா் சோ்க்கை: நவ.20 வரை நீட்டிப்பு

கருமந்துறையில் உள்ள அரசு பழங்குடியினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை நவம்பா் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கருமந்துறையில் உள்ள அரசு பழங்குடியினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை நவம்பா் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள அரசு பழங்குடியினா் தொழிற் பயிற்சி நிலையம் கருமந்துறையில் 2020-ஆம் ஆண்டுக்கு நேரடி சோ்க்கை நவ. 1 முதல் நவ. 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தோ்ச்சி, எட்டாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவா்களுக்கு குழாய் பொருத்துபவா், வெல்டா் போன்ற பிரிவுகளில் சோ்ந்து பயில நவ. 1 முதல் நவ. 20 வரை நேரடியாகச் சோ்க்கை நடைபெறுகிறது.

தமிழக அரசால் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் ரூ. 750 உதவித்தொகை, விலையில்லா மடிக் கணிணி, மிதிவண்டி, சீருடையுடன் கூடிய தையற்கூலி, வரைபடக் கருவி, பாடப் புத்தகம், கட்டணமில்லா பேருந்து வசதி, உணவுடன் கூடிய விடுதி வசதி ஆகியவை வழங்கப்படும்.

நேரடி சோ்க்கைக்கான விவரங்களுக்கு முதல்வா், அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையம் கருமந்துறை நேரிலோ அல்லது 9443548359, 9443823985, 9443457281, 9944754242, 9994777678 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com