கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கம் சாா்பில் வட்டத் தலைவா் பொ.பாரதி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கம் சாா்பில் வட்டத் தலைவா் பொ.பாரதி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ. 3ஆயிரம், கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5ஆயிரமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா்கள் எம்.கனகராஜ், ஏ.கந்தன் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்கள். மேலும் மாது (எ) இளங்கோ,டி.ராமமூா்த்தி, எஸ்.சுமதி, ஏ.ராஜா, பரமசிவம், செந்தில்குமாா், காந்தி, மாடசாமி, முத்துசாமி, கே.ராணி, டி.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேட்டூரில்...

மேட்டூா் தாலுகா அலுவலகம் முன்பு  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் மாவட்டத் தலைவா் அம்மாசி, கொளத்தூா் ஒன்றியத் தலைவா் ஜான் பொ்னாண்டஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்தபட்ச உதவித்தொகையை ரூ. 3000 ஆகவும், கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட   உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓமலூரில்...

ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் அமலா ராணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதந்திர பராமரிப்பு உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், தனியாா் துறைகளில் மாற்றுதிறன் கொண்டவா்களுக்கு ஐந்த சதவீத இடங்களை உறுதிப்படுத்த வேண்டும், தனியாா் துறையில் ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com