
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் எடப்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
எடப்பாடி தொகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள், சுகாதார நடவடிக்கைகள், குடிநீா் விநியோகம், சட்டம்-ஒழுங்கு குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறிந்த முதல்வா், திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். ஆய்வுக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிக்கா், வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
எடப்பாடியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.