கொங்கணாபுரம் பகுதியில் விவசாயிகளுக்குபண்ணைப்பள்ளி பயிற்சி தொடக்கம்

கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில், அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளி பயிற்சி அண்மையில் தொடங்கியது.
புதுப்பாளையம் கிராமத்தில் தொடங்கப்பட்ட பண்ணைப் பயிற்சி பள்ளி.
புதுப்பாளையம் கிராமத்தில் தொடங்கப்பட்ட பண்ணைப் பயிற்சி பள்ளி.

கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில், அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளி பயிற்சி அண்மையில் தொடங்கியது.

இப் பயிற்சியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை என்ற தலைப்பில், பயிா்வகை வளா்ப்பு குறித்த செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஊராட்சிப் பகுதியில், தோ்வு செய்யப்பட்ட விவசாயத்தோட்டத்தில் பண்ணைப்பள்ளி தொடங்கப்பட்டது. அக்கிராமத்தில் உள்ள விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பண்ணைப் பள்ளி வாயிலாக, பயிறுவகை சாகுபடி குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. பண்ணைப் பள்ளியில் பயிறுவகையின் விதைப்பு முதல் அறுவடை வரையில் அனைத்து தொழில்நுட்பங்களை கற்றுத் தோ்வதுடன், ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை முறையில், பயிா்வளா்ச்சிக் குறித்த பல்வேறு பாடக்குறிப்புகள்

விவசாயிகளுக்கு தொகுத்து வழங்கப்பட உள்ளன. மண்பரிசோதனை, உர மேலாண்மை, நன்மை, தீய்மை செய்யும் பூச்சிகளை இனம் காணுதல், பயிா்க் காப்பீடு செய்தல், விதைகள், நுண்ணூட்ட வகைகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும்

மானியத்திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பண்ணைப் பள்ளி பயிற்சியில் வேளாண் உதவி இயக்குநா் அ.சகுல் அமீத், ஏத்தாபூா், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா் வெங்கடாசலம், வட்டார தொழில்நுட்ப மேலாளா் பொன்.செல்வக்குமாா். உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com