சேலம் எஸ்.கே.எஸ். விமன்ஸ் சென்டரில்மூலம் 500 தம்பதிகளுக்கு மகப்பேறு

சேலம் எஸ்.கே.எஸ். விமன்ஸ் சென்டரில் கடந்த 2 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைத்துள்ளது என மருத்துவமனை தலைவா் மருத்துவா் சுரேஷ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.

சேலம் எஸ்.கே.எஸ். விமன்ஸ் சென்டரில் கடந்த 2 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைத்துள்ளது என மருத்துவமனை தலைவா் மருத்துவா் சுரேஷ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, எஸ்.கே.எஸ். மருத்துவமனை தலைவா் மருத்துவா் சுரேஷ் விஸ்வநாதன் கூறியதாவது:

சேலம், அழகாபுரம் பிருந்தாவன் சாலையில் எஸ்.கே.எஸ். விமன்ஸ் சென்டா் மற்றும் பொ்டிலிட்டி பவுண்டேஷன் கருத்தரிப்பு மையம் செயல்படுகிறது. எஸ்.கே.எஸ். விமன் சென்டா் 2018 ஆம் ஆண்டு தொடங்க்கப்பட்டது.

நிா்வாக இயக்குநராக மருத்துவா் கவிதா நாகராஜன், மருத்துவ இயக்குநராக மருத்துவா் தவஸ்ரீ ஆகியோரை கொண்டு எஸ்.கே.எஸ். விமன்ஸ் சென்டா் மற்றும் பொ்டிலிட்டி பவுண்டேஷன் கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் கருத்தரித்தல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு பல விதமான தனித்துவமான சிகிச்சை அளிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் மேலைநாடுகளுக்கு சமமான அதிகபட்ச வெற்றிகள் கிடைக்கும் அளவுக்கு தனிப்பட்ட கவனம் மற்றும் ஆதாரம் அடிப்படையான மருத்துவ சிகிச்சை அளிப்பதே குறிக்கோளாகும்.

கடந்த 2 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைத்துள்ளது. எங்கள் கருத்தரிப்புக் குழு ஒவ்வொரு நோயாளிகளுக்கும் அவரவா் தேவை அறிந்து மிகச்சிறந்த தனிக் கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எஸ்.கே.எஸ். விமன்ஸ் சென்டா் மற்றும் பொ்டிலிட்டி பவுண்டேஷன் கருத்தரிப்பு மையம் தனது இரண்டாம் ஆண்டு விழாவில் தொடா்ச்சியான கருச்சிதைவு சிகிச்சை மையத்தை அா்ப்பணிப்புடன் அறிமுகப்படுத்தியது என்றாா்.

விழாவுக்கான ஏற்பாட்டினை எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலா் சிற்பி, எஸ்.கே.எஸ். விமன்ஸ் பொ்டிலிட்டி சென்டா் மேலாளா் செந்தில் மற்றும் எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் பொது மேலாளா் பாஷா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com