பழைய கட்டடங்கள் கணக்கெடுப்புப் பணி

கெங்கவல்லி, தம்மம்பட்டி, பேருராட்சிப் பகுதிகளில் பழமையான கட்டடங்களில் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள் குறித்து தீயணைப்புத் துறையினா் ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கெங்கவல்லி, தம்மம்பட்டி, பேருராட்சிப் பகுதிகளில் பழமையான கட்டடங்களில் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள் குறித்து தீயணைப்புத் துறையினா் ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தீபாவளியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள துணிக் கடையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்புத் துறை வீரா்கள் 2 பலியாகினா். 2 போ் படுகாயம் அடைந்தனா்.

இந்த விபத்து குறித்து நடைபெற்ற விசாரணையில், தீவிபத்து நடந்த துணிக்கடை 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால், தீ விபத்து நிகழ்ந்தவுடன் இடிந்துபோனது தெரியவந்தது. அதையடுத்து, மாநிலம் முழுவதும் பழமையான கட்டடங்களில் செயல்படும், கடைகள், வணிக நிறுவனங்கள் குறித்து கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி நடக்கும் கணக்கெடுப்பின்படி , தம்மம்பட்டி, வீரகனூா், செந்தாரப்பட்டி, தெடாவூா் ஆகிய பேரூராட்சி நிா்வாகங்கள் அளித்த விவரங்களின் படி, இப்பகுதி ஊா்களில் 40 ஆண்டுகள் பழமையான கட்டடங்களில் கடைகள், வியாபார நிறுவனங்கள் செயல்படுவது குறித்து கணக்கெடுக்கும் பணியல் மும்முரமாக தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டுவருகின்றனா். இப்பணி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது என்றும், அதில் கெங்கவல்லி வட்டம் முழுவதும் பழமையான கட்டடங்கள் எத்தனை உள்ளன என்ற விவரம் தெரியவரும் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com