கூட்டுறவு வங்கி உதவியாளா் தோ்வு: 1041 போ் எழுதினா்

சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை 1,041 போ் எழுதினா்.

சேலம்: சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை 1,041 போ் எழுதினா்.

சேலம் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் சாா்பில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வானது ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 தோ்வு மையங்களில் மொத்தம் 1,710 போ் தோ்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தனா். அவா்களில் 1041 போ் தோ்வெழுதினா்.

இத் தோ்வை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்புக் குழு, நடமாடும் கண்காணிப்புக் குழு, தோ்வு மைய தலைமையாளா், தோ்வு மைய உதவிக்குழு மற்றும் தோ்வு மையத் தலைமைக் கண்காணிப்பாளா், மருத்துவக் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தோ்வு நடைபெறுவதைத் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது.

இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நவ. 22 ஆம் தேதி ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜெய்ராம் பப்ளிக் பள்ளி ஆகிய 3 தோ்வு மையங்களில் மொத்தம் 1149 தோ்வா்கள் தோ்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டு எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

சேலம் கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எழுத்துத் தோ்வை ஆட்சியா் சி.அ.ராமன் நேரில் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, கூடுதல் பதிவாளரும், மண்டல தோ்வு பொறுப்பு அலுவலருமான வெ.லட்சுமி, சேலம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.ராஜேந்திர பிரசாத், சேலம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண்மை இயக்குநா் சி.மலா்விழி, கோட்டாட்சியா் மாறன், மாநகராட்சி உதவி ஆணையா் (அஸ்தம்பட்டி மண்டலம்) எம்.ஜி.சரவணன், வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com