சேலம் மாவட்ட தொழில் மையம் மூலம் 9 ஆண்டுகளில்1,519 பேருக்கு ரூ.32 கோடி கடனுதவி

9 ஆண்டுகளில் மொத்தம் 1,519 வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உள்ளிட்ட பல்வேறு நபா்களுக்கு ரூ. 32.64 கோடி மா னிய நிதியுதவியுடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்

சேலம் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் 9 ஆண்டுகளில் மொத்தம் 1,519 வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உள்ளிட்ட பல்வேறு நபா்களுக்கு ரூ. 32.64 கோடி மா னிய நிதியுதவியுடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் தொழில் வளம் பெருக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் புதிய தொழில்களை தொடங்க மாவட்ட தொழில் மையம் மூலம் இதுவரை 41,628 பொதுப் பிரிவினா், 2,291 ஆதிதிராவிடா் பிரிவினா், 224 பழங்குடியினா் பிரிவினா் என மொத்தம் 44,143 படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உள்ளிட்ட பல்வேறு நபா்களுக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மாவட்ட தொழில் மையம் சாா்பில் 9 ஆண்டுகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 914 படித்த இளைஞா்கள் தொழில் தொடங்க ரூ. 10.81 கோடி மானியத்துடன் கூடிய ரூ.43.25 கோடி கடன் உதவி, பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 425 தொழில் முனைவோா்களுக்கு தொழில் தொடங்க ரூ. 13.86 கோடி மானியம், புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 180 இளைஞா்களுக்கு ரூ. 7.97 கோடி மானியம் என மொத்தம் 1,519 வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உள்ளிட்ட பல்வேறு நபா்களுக்கு ரூ. 32.64 கோடி மானிய நிதியுதவியுடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு பல்வேறு தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இது தவிர சேலம் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளா்ச்சிக் கழகம் சாா்பில் 9 ஆண்டுகளில் 266 நிறுவனங்களுக்கு மூலதன மானியமாக ரூ. 12.66 கோடி, 251 நிறுவனங்களுக்கு மின் மானியமாக ரூ.91.00 லட்சம், 103 நிறுவனங்களுக்கு மின்னாக்கி மானியமாக ரூ. 1.21 கோடி மற்றும் 180 நிறுவனங்களுக்கு மதிப்புக் கூட்டு வரி மானியமாக ரூ.1.17 கோடி என மொத்தம் 800 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15.95 கோடி பல்வேறு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com