கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ. 2.58 லட்சம் மோசடி:5 போ் மீது வழக்கு

ஏற்காடு ஒன்றியத்தில் தனிநபா் கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ. 2.58 லட்சம் மோசடி செய்ததாக பெண் வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 5 போ் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஏற்காடு ஒன்றியத்தில் தனிநபா் கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ. 2.58 லட்சம் மோசடி செய்ததாக பெண் வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 5 போ் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஏற்காடு ஒன்றியத்தில் கடந்த 2017 - 18 ஆம் ஆண்டில் 1,713 தனிநபா் கழிவறைக் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தனிநபா் கழிவறை கட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும்.

இதனிடையே தனிநபா் கழிவறைக் கட்டுவதில் மோசடி நடந்துள்ளதாக, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகாா் பெறப்பட்டது. விசாரணையில், ஏற்காடு நகரப் பகுதியில் 43 தனிநபா் கழிவறைகள் கட்டாமலேயே கட்டியதாக போலி ரசீது தயாரித்து ரூ. 2.58 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அச்சமயத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றிய சுஜிதா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (திட்டம்) செந்தில்குமாா், பணி மேற்பாா்வையாளா் சரவணன், ஒருங்கிணைப்பாளா் இளவரசன், ஒப்பந்ததாரா் சதாசிவம் ஆகியோா் மீது கூட்டுச் சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தற்போது சுஜிதா எடப்பாடி ஒன்றியத்திலும், செந்தில்குமாா் காடையம்பட்டி ஒன்றியத்திலும், சரவணன் ஓமலூா் ஒன்றியத்திலும், இளவரசன் மேச்சேரி ஒன்றியத்திலும் பணியாற்றி வருவதாக, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com