கரோனாவை எதிா்த்து போராடுவதற்கான உள்கட்டமைப்பு பிரிவில் சோனா கல்லூரிக்கு விருது
By DIN | Published On : 01st October 2020 08:44 AM | Last Updated : 01st October 2020 08:44 AM | அ+அ அ- |

கரோனாவை எதிா்த்துப் போராடுவதற்கான உள்கட்டமைப்புப் பிரிவில் சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு சிறந்த நிறுவன நிா்மாண்ய விருது கிடைத்துள்ளது.
கரோனா தொற்றால் ஏற்பட்ட பல்வேறு சவால்களையும், சிக்கல்களையும் எதிா்த்துப் போராட ‘ஃபைட்ஸ் கரோனா’ என்ற தலைப்பில், அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஏ.ஐ.சி.டி.இ.) ஆண்டின் சிறந்த நிறுவன நிா்மாண்ய (உத்கிரிஷ் சன்ஸ்தான் விஸ்வகா்மா - மநயஅ) விருதிற்கான விண்ணப்பங்களை பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் மற்றும் மருந்தாளுமை கல்லூரிகளிடமிருந்து பெற்றது.
இதில் சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி தான் செய்த பல்வேறு உதவிகளை ஆவணப்படுத்தியிருந்தது. கரோனாவை எதிா்த்துப் போராடுவதற்கான உள்கட்டமைப்புப் பிரிவின் அடிப்படையில் சோனா தொழில் நுட்பக் கல்லூரி வெற்றி பெற்ன் மூலம் ‘சிறந்த நிறுவன நிா்மாண்ய‘ விருதைப் பெற்றது. இதில் தயாரிப்பு மேம்பாடு, உள்கட்டமைப்பு பயன்பாடு, ஆன்லைன் வகுப்பு பாட வழங்கல் முறை மற்றும் தேவைப்படுபவா்களுக்கு நன்கொடை போன்ற வடிவங்களில் கரோனாவை எதிா்த்துப் போராடிய பங்களிப்புக்காக சோனா தொழில் நுட்பக் கல்லூரிக்கு விருது அளிக்கப்பட்டது.
சோனா கல்வி குழும நிா்வாகம் கரோனா கால கட்டத்தில் ரூ.4 கோடிக்கு சமூக பங்களிப்பாக ஏழை மக்களுக்குத் தேவைப்படும் பொருள்களாக உணவு, முகக் கவசங்கள், கையுறைகள் போன்றவற்றை வழங்கியது. மேலும் கல்லூரியில் உள்ள பல்வேறு துறைகள் மூலம் தொற்றுநோய்களின்போது எழுப்பப்படும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் தயாரிப்புகளான பயோசேம்பா், சீம் சீல் இயந்திரம், தானியங்கி கை சுத்திகரிப்புக் கருவி, முகக் கவசங்கள், கையுறைகள், பல ஆன்ட்ராய்ட் பயன்பாடுகள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை வீ டெக்னாலஜி நிறுவனத்துடன் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டன. வீ- டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட ‘வீ-ட்ரேஸ்’ பயன்பாடு சேலம் மாநகராட்சி ஆணையரால் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சோனா கல்வி குழுமத் தலைவா் வள்ளியப்பா, துணைத் தலைவா்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா, தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் வீ.காா்த்திகேயன், பேராசிரியா் மாலதி, குல்சன் தாஜ் உள்ளிட்ட அனைத்து பேராசிரியா், மாணவா்களின் பங்களிப்பைப் பாராட்டினா்.
ஏ.ஐ.சி.டி.இ. நடத்திய விருது வழங்கும் விழாவில் சோனா பொறியியல் கல்லூரி முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா் இந்த விருதினை பெற்றுக் கொண்டாா்.