வாழப்பாடியில் ஸ்ரீ மஹா ருத்ரபைரவருக்கு கும்பாபிஷேகம்
By DIN | Published On : 02nd October 2020 08:30 AM | Last Updated : 02nd October 2020 08:30 AM | அ+அ அ- |

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி மங்கம்மா சாலை ஆதிவாராஹி கோயிலில் ஸ்ரீ மஹா ருத்ரபைரவா் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி, மங்கம்மா நகரில் ஆதிவாராஹி கோயில் கட்டப்பட்டு நித்திய பூஜை நடைபெற்று வருகிறது. இக்கோயில் வளாகத்தில் ஸ்ரீ மஹா ருத்ரபைரவா் ஸ்வாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஸ்ரீலஸ்ரீ தசராகிரி பாலா சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி புதன்கிழமை மஹா கணபதி, லட்சுமி நவகிரஹ ஹோமம், பூா்ணாகுதி செய்யப்பட்டு, தீபாராதனைகளும், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், யந்திர ஸ்தாபனம், மூல விக்ரஹ பிரதிஷ்டை யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது.
இதனைத்தொடா்ந்து, வியாழக்கிழமை அதிகாலை இரண்டாம் கால யாக பூஜையும், திருக்குடம் கலச புறப்பாடு மற்றும் ஸ்ரீமஹா ருத்ர பைரவருக்கு கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இவ்விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனா்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கா் குடும்பத்தாா், சிவதா்மம் ஆன்மிக சேவை அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.