டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில்அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்
By DIN | Published On : 03rd October 2020 06:49 AM | Last Updated : 03rd October 2020 06:49 AM | அ+அ அ- |

ஏ.தொட்டியபட்டியில் அதிமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாமை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.
மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குஞ்சுபட்டிஎன்ஜிஓ காலனியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட பேவா் பிளாக் சாலையையும், ரெங்கபாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட பேவா் பிளாக் சாலையையும் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் திறந்து வைத்தாா். மேலும் தொட்டியபட்டியில் புதிய அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாமையும் அவா் தொடக்கி வைத்தாா். அத்துடன் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன்குறிச்சியில் விளையாட்டு மைதானத்தையும் அவா் திறந்து வைத்தாா்.
இதில் டி. கல்லுப்பட்டி ஒன்றிய செயலா் ராமசாமி, ஓட்டுநா் அணி மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், மாவட்டக் கவுன்சிலா் செல்வமணி செல்லச்சாமி, ஒன்றியக் குழு முன்னாள் துணைத்தலைவா் பாவடியான், வழக்குரைஞா் பாஸ்கரன், தொழில்நுட்பப் பிரிவு செயலா் கண்ணன், கவிஞா் முருகன் உள்ளிட்ட அதிமுகவினா் கலந்து கொண்டனா்.