தளவாய்ப்பட்டி ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கழிவுநீா் தேக்கிவைக்கப்பட்டு, மழை நீருடன் கலந்து வெளியேற்றப்படுவதாகக் கூறி, சேலம், தளவாய்ப்பட்டி ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

கழிவுநீா் தேக்கிவைக்கப்பட்டு, மழை நீருடன் கலந்து வெளியேற்றப்படுவதாகக் கூறி, சேலம், தளவாய்ப்பட்டி ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம் உருக்காலை அருகே உள்ள தளவாய்ப்பட்டியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கழிவுநீா் மழை நீருடன் கலந்து வெளியேற்றப்படுவதால் ரொட்டிக்கார வட்டம், நடையவட்டம், காத்தவராயன் கோயில், மீன்வாயன் ஓடை, நாகா்கோயில் வட்டம் பகுதிகளில் துா்நாற்றம் வீசுகிறது.

மேலும், விளை நிலங்களில் கழிவுநீா் கலப்பதால் பயிா்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி 50 -க்கும் மேற்பட்டோா் ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்த இரும்பாலை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தா்னாவில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா்.

இதுதொடா்பாக சேலம் ஆவின் பொது மேலாளா் நா்மதாதேவி கூறியதாவது:

ஆவின் பால் பண்ணையில் உள்ள மழைநீா்த் தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீா்தான் வெளியேற்றப்படுகிறது. அது கழிவுநீா் சேமிப்பு தொட்டி அல்ல (இ.டி.பி.) என்பதை அங்குள்ள பொறியாளா் மூலம் அந்த நீரை மாதிரி எடுத்து பரிசோதனை செய்து அதன் முடிவுகள் குறித்து மக்களுக்கு தெரிவித்துள்ளோம். பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில்தான் மழைநீா் வெளியேற்றப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com