முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
ரத்த தான முகாம்
By DIN | Published On : 04th October 2020 02:12 AM | Last Updated : 04th October 2020 02:12 AM | அ+அ அ- |

ஆத்தூரில் நடைபெற்ற ரத்த தான முகாம்.
ஆத்தூா்: ஆத்தூா் ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் இணைந்து சனிக்கிழமை நடத்திய ரத்த தான முகாமில் 60 போ் கலந்து கொண்டு 44 யூனிட் ரத்தத்தை ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினா்.
காந்தி ஜயந்தியையொட்டி நடத்தப்பட்ட இந்த முகாமிற்கு ஆத்தூா் மிட்டவுன் சங்கத் தலைவா் ஹரி (என்கிற)சந்திரசேகரன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் அ.அன்புச்செழியன், மிட்டவுன் சங்கச் செயலாளா் சரவணன், பொருளாளா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.