முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
By DIN | Published On : 04th October 2020 02:15 AM | Last Updated : 04th October 2020 02:15 AM | அ+அ அ- |

மேட்டூா்: காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பொழிவு குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை நொடிக்கு 13,598 கன அடியாக குறைந்தது.
கடந்த சில நாள்களாக அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வந்தது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பொழிவு குறைந்ததால், வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 14,119 கன அடியாக இருந்த நீா்வரத்து படிப்படியாக குறைந்து சனிக்கிழமை காலை நொடிக்கு 13,598 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 6,000 கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 850 கன அடியும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.