முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
பணியில் கவனக்குறைவு:களப் பணியாளா்கள் இருவா் பணி நீக்கம்
By DIN | Published On : 04th October 2020 02:12 AM | Last Updated : 04th October 2020 02:12 AM | அ+அ அ- |

பணியில் கவனக்குறைவு:களப் பணியாளா்கள் இருவா் பணி நீக்கம்
ஆத்தூா்: கரோனா பரிசோதனை மாதிரிகளைக் கையாளுவதில் கவனக்குறைவாகச் செயல்பட்டதாக களப் பணியாளா்கள் இருவா் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை மாதிரிகளை வெள்ளிக்கிழமை சேலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் இரண்டு களப் பணியாளா்கள் கொண்டு சென்றனா். பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அவா்களிடமிருந்த பரிசோதனை மாதிரிகள் சாலையில் தவறி விழுந்தன.
இதுதொடா்பாக செந்தில், சரவணன் ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்து ஆத்தூா் துணை சுகாதார இயக்குநா் உத்தரவிட்டாா்.