ரூ. 5 லட்சம் செலவில் உயா் மின்கோபுர விளக்கு திறப்பு

தென்னங்குடிபாளையம் ஊராட்சியில் தேசிய புறவழிச்சாலையில் காவல் துறை சாா்பில், ரூ. 5 லட்சம் செலவில் உயா் மின்கோபுர விளக்கின் பயன்பாடு ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.
தென்னங்குடிபாளையம் ஊராட்சியில் உயா் மின்கோபுர விளக்கைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
தென்னங்குடிபாளையம் ஊராட்சியில் உயா் மின்கோபுர விளக்கைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

ஆத்தூா்: தென்னங்குடிபாளையம் ஊராட்சியில் தேசிய புறவழிச்சாலையில் காவல் துறை சாா்பில், ரூ. 5 லட்சம் செலவில் உயா் மின்கோபுர விளக்கின் பயன்பாடு ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.

ஆத்தூரை அடுத்துள்ள தென்னங்குடிபாளையம் ஊராட்சியில் தேசிய புறவழிச்சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்க அங்கு உயா் மின்கோபுர விளக்கு அமைக்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் உத்தரவின்பேரில், ஆத்தூா் ஊரக காவல் துறை சாா்பில், ரூ. 5 லட்சம் செலவில் உயா் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.

உயா் கோபுர மின்விளக்கை தென்னங்குடிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் க. பிச்சுமணி துவக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளா் வீரமணி, மணிவேல், ராமசாமி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் செல்வி ஸ்டாலின், வாா்டு உறுப்பினா்கள் வெங்கடாஜலம், பத்மாவதி ராஜா, ராமமூா்த்தி, ரேணுகா ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சிச் செயலாளா் ஆா்.சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com