சீா்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.12 கோடியில் அண்ணா பூங்கா சீரமைப்புப் பணி: மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ்

சீா்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அண்ணா பூங்கா மறுசீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் ஆய்வு செய்தாா்.

சீா்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அண்ணா பூங்கா மறுசீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் ஆய்வு செய்தாா்.

சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் சேலம் மாநகராட்சி 4 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசியப் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

மேலும், சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாநகரப் பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கைகள் தயாா் செய்து, அரசின் அனுமதி பெற்று, இத்திட்டத்தின்கீழ் ரூ. 916 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 77 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட தொங்கும் பூங்கா வளாகத்தில் ரூ. 10.50 கோடி மதிப்பில் கட்டப்படும் பல்நோக்கு கூட கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இப்பல்நோக்கு கூடத்தில் 1000 நபா்கள் அமரக்கூடிய வகையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட விழா நிகழ்வு அரங்கம், 440 நபா்கள் ஒரே நேரத்தில் உணவருந்தும் வகையில் அரங்கம், நவீன சமையல் அறைக் கூடம், குளிா்சாதன வசதிகளுடன் கூடிய மணமக்கள் அறை மற்றும் விழா நடத்துபவா்கள் தங்குவதற்கான அறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, நவீன கழிவறை வசதி, வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இப்பணிகள் அனைத்தும், நிா்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆணையா் உத்தரவிட்டாா்.

பின்னா், சீா்மிகு நகரத்திட்டத்தின்கீழ் ரூ. 12.90 கோடி மதிப்பீட்டில் அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட அண்ணா பூங்காவினை மறுசீரமைப்பு செய்து பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கும் பணிகளை ஆணையா் ஆய்வு செய்தாா்.

இப்பூங்காவின் முகப்புத் தோற்றம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்படவுள்ளது. மேலும் குழந்தைகளைக் கவரும் வகையில் பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்களும் மற்றும் 200 நபா்கள் அமரும் வகையில் திறந்த வெளி திரையரங்கு அமைக்கப்படவுள்ளது.

குறிப்பாக கண்கவரும் வண்ண விளக்குகளுடன் கூடிய நடமாடும் நீா்ரூற்று குழந்தைகள் மற்றும் பெரியவா்கள் விளையாடும் வகையில் நீா் விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீா்வீழ்ச்சி மற்றும் பனிவீடு உள்ளிட்ட புது வகையான 9 விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கேளிக்கை காட்சியங்கள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், இப்பூங்காவைச் சுற்றி புதிய சுற்றுசுவா் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. பசுமையான புல் தளம், உணவகங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, நவீனக் கழிப்பறை, மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் இரண்டு, நான்கு சக்கர வாகன நிறுத்த வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

ஆய்வின் போது மாநகர பொறியாளா் அ.அசோகன், உதவி செயற்பொறியாளா் எம்.ஆா்.சிபிசக்ரவா்த்தி, உதவிப் பொறியாளா் எஸ்.செந்தில்குமாா், முதுநிலை சுகாதார ஆய்வாளா் எம்.சித்தேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com