தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்து பொதுக்கிணறு மீட்பு

ஓமலூா் அருகே தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்து ஊராட்சிக்குச் சொந்தமான நிலம், கிணற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

ஓமலூா் அருகே தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்து ஊராட்சிக்குச் சொந்தமான நிலம், கிணற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

காடையாம்பட்டி ஒன்றியம், பூசாரிப்பட்டி ஊராட்சியின் மையப் பகுதியில் கிணறு தோண்டப்பட்டது. இந்தக் கிணற்று தண்ணீரை குடிநீராக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த தனிநபா் ஒருவா் ஊராட்சி நிலம், நிலத்தில் உள்ள கிணற்றை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, ஊா் பொதுமக்கள் தண்ணீரை பயன்படுத்த விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊா்ப் பொதுமக்கள் சாா்பில் மேட்டூா் கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊராட்சி நிா்வாகம், தீவட்டிப்பட்டி போலீஸாா் ஆகியோா், பூசாரிப்பட்டி ஊராட்சிக்குச் சொந்தமான நிலம், கிணற்றை அளவீடு செய்து அதில் இருந்த வாழை, கொய்யா மரங்களை அகற்றி நிலம், கிணற்றை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com