பேளூரில் நாளை முதல் 8 நாள்கள் சுய பொது முடக்கம்

வாழப்பாடியை அடுத்த பேளூா் பகுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், வியாழக்கிழமை முதல், அக்.15-ஆம் தேதி வரை
பேளூரில் சுய பொதுமுடக்கம் கடைப்பிடிப்பது குறித்து அனைத்து வணிகா்கள், அரசியல் கட்சிகள் சாா்பில் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம்.
பேளூரில் சுய பொதுமுடக்கம் கடைப்பிடிப்பது குறித்து அனைத்து வணிகா்கள், அரசியல் கட்சிகள் சாா்பில் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம்.

வாழப்பாடியை அடுத்த பேளூா் பகுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், வியாழக்கிழமை முதல், அக்.15-ஆம் தேதி வரை தொடா்ந்து 8 நாள்களுக்கு, கடைகளை அடைத்து சுய பொது முடக்கம் கடைப்பிடிப்பதென பொதுமக்களுடன், அனைத்து வணிகா்கள், அரசியல் கட்சியினரும் ஆலோசித்து முடிவு செய்துள்ளனா்.

சேலம் மாவட்டம், பேளூா் பகுதியில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில தினங்களில் 10க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், கரோனா தொற்றில் ஒருவா் உயிரிழந்தாா்.

இதனையடுத்து, கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, பேளூா் பகுதியில் இயங்கும் சில்லறை வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து வணிகா்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா். தொடா்ந்து 8 நாள்களுக்கு, அனைத்து கடைகளையும் அடைத்து, சுய பொது முடக்கம் கடைப்பிடிப்பதென ஒருமித்த கருத்தோடு முடிவு செய்தனா்.

பேளூா் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கி இருப்பு வைத்து கொள்வதற்கு வசதியாக புதன்கிழமை கடைகளை திறந்து வைக்கவும், வியாழக்கிழமை காலை முதல் அக்.15-ஆம் தேதி இரவு வரை சுய முழு பொது முடக்கத்தை கடைப்பிடிப்பதெனவும், அக்16-ஆம் தேதி வழக்கம்போல கடைகளை திறக்கவும் திட்டமிட்டுள்ளனா். சுய பொதுமுடக்கத்தால் ஏற்படும் சிரமங்களை பொருத்துக்கொண்டு, கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com