பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நேரில் விசாரணை செய்யும் முறை அமல்

சேலத்தில் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்யும் நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் அமலானது.

சேலத்தில் காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்யும் நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் அமலானது.

சேலம் மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் உத்தரவின்பேரில், காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை உடனடியாக சமுதாய பணி பதிவேட்டில் (சி.எஸ்.ஆா்.) பதிவு செய்து, பதிவெண் கொடுத்து ஆய்வாளா் , உதவி ஆய்வாளா், காவலா்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொள்ளும் முறை சேலம் நகரில் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின் முதல்நாளில் கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, கன்னங்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

அதன்படி அந்தமனுக்கள் மீது விசாரணை நடத்த ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் சம்பவ இடத்துக்கு நேரில்சென்று விசாரணை மேற்கொண்டு தீா்வு கண்டனா். காவல்துறையின் புதிய நடைமுறைக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com