வேளாண் சட்டங்களை கண்டித்துநங்கவள்ளியில் மறியல் போராட்டம்

வேளாண் சட்டங்களை கண்டித்து நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

வேளாண் சட்டங்களை கண்டித்து நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்துக்கு நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பழ.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். அந்தக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் போராட்டத்தைத் தொடக்கி வைத்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வைத்திலிங்கம், அய்யனாா், சின்னத்தம்பி, கிருஷ்ணன், மேச்சேரி ஒன்றியச் செயலாளா் காத்தமுத்து, எடப்பாடி ஒன்றியச் செயலாளா் பெரியதம்பி, மேட்டூா் நகரச் செயலாளா் கருப்புசாமி உள்பட  நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நங்கவள்ளி - ஜலகண்டபுரம் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து தடைபட்டது.  

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 172 பேரை ஓமலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் தலைமையிலான போலீஸாா் போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் வேளாண் சட்டங்களை கண்டித்தும் முழக்கம் எழுப்பப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com