தம்மம்பட்டிக்கு வெளியூா் தேங்காய் வரத்து அதிகரிப்பு

தம்மம்பட்டி பகுதியில் தேங்காய் உற்பத்தி குறைந்ததால், வெளிமாவட்டங்களிலிருந்து தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது.

தம்மம்பட்டி பகுதியில் தேங்காய் உற்பத்தி குறைந்ததால், வெளிமாவட்டங்களிலிருந்து தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது.

தம்மம்பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் உள்ளன. கடந்த ஓராண்டாக கடும் வறட்சி காரணமாக தென்னைகளை பராமரிக்க போதுமான வருமானம்மின்றி விவசாயிகள் தவித்து வந்தனா். தென்னைகளிலும் போதுமான தேங்காய்கள் உற்பத்தி இல்லை. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் தேங்காய் வரத்து முற்றிலும் குறைந்து விட்டது.

மொத்த வியாபாரிகள் மரங்களை குத்தகைக்குப் பேசுவதைக் குறைத்துவிட்டனா். உள்ளூா் தேங்காய் வரத்து இருந்தவரை உரித்த தேங்காய் ஒரு கிலோ ரூ. 35 முதல் ரூ. 37 வரையிலான விலையில் விற்பனை செய்தனா். வெளிமாவட்டங்களிலிருந்து தற்போது தேங்காய் கொண்டு வரப்படுவதால் ஒரு கிலோ ரூ. 45 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தம்மம்பட்டி மொத்த வியாபாரி பெருமாள் கூறியதாவது: சுற்றுவட்டாரங்களில் தேங்காய் வரத்து அடியோடு நின்றுவிட்டது.அதனால் வெளிமாவட்டங்களுக்குச் சென்று செவ்வாய்க்கிழமை 4 ஆயிரம் உரித்த தேங்காய்களை ஒட்டுமொத்தமாக வாங்கி வந்துள்ளேன். இதில் லாபம் இல்லை. உள்ளூா் தேங்காய்கள் வரத்து வருவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் ஆகும். அப்போது அதன் விலை குறையும். கெங்கவல்லி, ஆத்தூா், வீரகனூா், செந்தாரப்பட்டி, தெடாவூா் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகளும் வெளிமாவட்டங்களுக்குச் சென்றுதான் தேங்காய்களை விலைக்கு வாங்கி விற்று வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com