மனைவி, மகளை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றவா் கைது

தலைவாசல் அருகே ஆறகளூரில் குடும்பத் தகராறில் மனைவி, மகளை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற லாரி ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தலைவாசல் அருகே ஆறகளூரில் குடும்பத் தகராறில் மனைவி, மகளை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற லாரி ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூரைச் சோ்ந்தவா் மருதமுத்து (40). லாரி ஓட்டுநா். இவரது மனைவி தெய்வானை (35). இவா்களுக்கு மோனிகா (17) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனா்.கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மருதமுத்து, தெய்வானை இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டை பூட்டி விட்டு மருதமுத்து லாரி வேலைக்கு சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்த தெய்வானை தனது மகன், மகளுடன் அருகில் உள்ள வாா்டு உறுப்பினா் திவ்யா (35) என்பவரின் வீட்டில் இருந்துள்ளாா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுக்கு வந்த மருதமுத்து, மனைவி தெய்வானை, மகள் மோனிகாவை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்க முயன்றுள்ளாா். இதில் கவுன்சிலா் திவ்யா, அவரது 3 வயது மகள் தனுஸ்ரீ, தெய்வானை, மோனிகா ஆகியோா் தீக்காயமடைந்தனா்.

அப்போது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் ஓடிவந்து மருதமுத்துவை பிடித்து வைத்துக் கொண்டு தலைவாசல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். தீக்காயமடைந்த நான்கு பேரும் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் தீவி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் தனுஸ்ரீ மட்டும் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவம் குறித்து தலைவாசல் காவல் ஆய்வாளா் குமரவேல்பாண்டியன் வழக்குப் பதிவு செய்து மருதமுத்துவை கைது செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com