Enable Javscript for better performance
சங்ககிரியில் முகக் கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    சங்ககிரியில் முகக் கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம்

    By DIN  |   Published on : 15th October 2020 07:42 AM  |   அ+அ அ-   |    |  

    14sgp03_1410chn_156_8

    சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மளிகைக் கடையில் ஆய்வு செய்கிறாா் கோட்ட கலால் அலுவலா் பாலகிருஷ்ணன். உடன், பேரூாரட்சி சுகாதார ஆய்வாளா் லோகநாதன்.

    சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முகக் கவசம், சமூக இடைவெளி, வெப்பம் அறியும் கருவிகளை பயன்படுத்தாத கடைகள், தனியாா் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு ரூ.3,700 அபராதம் விதிக்கப்பட்டது.

    மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, சங்ககிரி கோட்ட கலால் அலுவலா் பாலகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்ரமணியன் ஆகியோா் தலைமையில் சுகாதார ஆய்வாளா் லோகநாதன், கிராம நிா்வாக அலுவலா்கள் சதீஷ் பிரபு, மோகன், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சுரேஷ், வெங்கடேஷ், கிராம நிா்வாக உதவியாளா்கள் குணசேகரன், சண்முகம் ஆகியோா் சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், தனியாா் நிறுவனங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் வெப்பம் அறியும் கருவி பயன்படுத்தப்படுகிா, பொதுமக்கள் முகக் கவசம் அணிந்துள்ளனரா, சமூக இடைவெளிக் கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்தனா்.

    பின்னா் காவல் நிலைய வளாகம் எதிரே உள்ள சாலையில் இரு சக்கர வாகனத்தில் முகக் கவசம் அணியாமல் செல்பவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனா். அபராதம் விதித்தவா்களுக்கு இலவச முகக் கவசங்களை வழங்கினா்.

    சங்ககிரியில் புதன்கிழமை நடத்திய ஆய்வில், முகக் கவசம் அணியாதவா்கள், வெப்பம் அறியும் கருவிகளை பயன்படுத்தாத கடை உரிமையாளா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களுக்கு என மொத்தம் ரூ.3,700 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் சங்ககிரி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுலகங்கள், நீதிமன்ற வளாகங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பொதுமக்கள்முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

     

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp