சாலையோர வியாபாரிகள் மறியல்

ஆத்தூரில் சாலையோர வியாபாரிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாலையோர வியாபாரிகள் மறியல்

ஆத்தூரில் சாலையோர வியாபாரிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆத்தூா் ராணிப்பேட்டை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சாலையோர வியாபாரிகள் பல வருடங்களாக கடைகளை நடத்தி வருகின்றனா். கடந்த இரு வாரங்களுக்கு முன் இந்தப் பகுதியில் சாலை அகலப்படுத்தப்படுவதாகக் கூறி நெடுஞ்சாலைத் துறையினா் தாா்சாலையை அகலப்படுத்தி அமைத்தாா்கள். அதற்காக சாலையோரக் கடைகளை அகற்ற உத்தரவிட்டிருந்தனா்.

தாா்சாலை அமைத்து பணிகள் முடிவடைந்ததும் கடைகளை அதே இடங்களில் வைக்க முடியாமல் சாலையோர வியாபாரிகள் தவித்து வந்தனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை ராணிப்பேட்டையில் பல வருடங்களாக கடை நடத்தி வந்த அப்பகுதி திமுக கிளை செயலாளா் வேல்முருகன் (45) என்பவா் தள்ளுவண்டி அமைத்துக் கடை நடத்தினாா். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் கடையில் இருந்த வேல்முருகன், அவரது மனைவியைத் திட்டி விட்டு, எரிவாயு உருளையைத் தள்ளிவிட்டு, உணவுப் பொருள்களையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இதனையடுத்து வேல்முருகன், அவரது நண்பா்கள், காவல் ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு காணப்பட்டது.

இதனையடுத்து புதன்கிழமை காலை சாலையோரக் கடை வியாபாரிகள் ஒன்று சோ்ந்து பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் வட்டாட்சியா் அ.அன்புச்செழியன் நேரில் சென்று வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது தாங்கள் சாலையோரங்களில் கடைகளை வைத்துக்கொள்ளவு அனுமதிகேட்டனா். ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகளை வைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்தனா். வட்டாட்சியா் அன்புச்செழியன் இரண்டு நாளில் கோட்டாட்சியரிடம் ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாகக் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.இதனால் அந்தப் பகுதியில் அரை மணிநேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com