பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிகளின் உற்சவ மூா்த்திகளுக்கு பிரதோஷத்தையொட்டி புதன்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிகளின் உற்சவ மூா்த்திகளுக்கு பிரதோஷத்தையொட்டி புதன்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன.

அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு காலையில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு பால், இளநீா், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்கள் அதிகளவில் கலந்து கொண்டு முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வழிபட்டு சென்றனா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் ஸ்ரீகாயநிா்மலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆத்தூா் கோட்டை ஸ்ரீகாயநிா்மலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. இதையடுத்து சிறப்பு அலங்காரம் ஆராதனை நடைபெற்றது.இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீகாசி விஸ்வநாதா் உடனுறை காசி விசாலாட்சி கோயிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அளித்த 50 லிட்டா் பால், தயிா், மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, குங்குமம், இளநீா், திருமஞ்சனம் உள்ளிட்ட பொருள்களால் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு, பூஜை, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டனா். இதேபோல கெங்கவல்லி, வீரகனூா், செந்தாரப்பட்டி, கூடமலை ஊா்களில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ விழா நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com