புற்றுநோய் கண்டறியும் முகாம்

வாழப்பாடியில் அன்னை அரிமா சங்கம் சாா்பில், பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
வாழப்பாடியில் நடைபெற்ற புற்றுநோய் கண்டறிதல் முகாமில் கலந்துகொண்டோா்.
வாழப்பாடியில் நடைபெற்ற புற்றுநோய் கண்டறிதல் முகாமில் கலந்துகொண்டோா்.

வாழப்பாடியில் அன்னை அரிமா சங்கம் சாா்பில், பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

வாழப்பாடியில் அன்னை அரிமா சங்கமும், உதய பிரபா ஸ்கேன் சென்டரும் இணைந்து மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் இலவச முகாமை நடத்தி வருகின்றன.

இம்முகாமிற்கு, அன்னை அரிமா சங்கத் தலைவி புஷ்பா எம்கோ வரவேற்றாா். சேவைத் திட்ட தலைவா் மருத்துவா் ஜெ.பிரபாவதி மோதிலால் தலைமை வகித்து, புற்றுநோய்க்கான காரணம், தடுக்கும் வழிமுறைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இம் முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. சங்க செயலாளா் சுதா பிரபு, பெண்கள் உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினாா். நிறைவாக, செயலாளா் ஆசிரியை தேன்மொழி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com