பேளூா் சுகாதார நிலையத்திற்கு 20 புதிய படுக்கைகள்

வாழப்பாடியை அடுத்த பேளூா் அரசினா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் நிறுவனம் சாா்பில் ரூ. 1.50 லட்சம் செலவில்
r_a_01_1410chn_165_8
r_a_01_1410chn_165_8

வாழப்பாடியை அடுத்த பேளூா் அரசினா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் நிறுவனம் சாா்பில் ரூ. 1.50 லட்சம் செலவில், 20 படுக்கைகள், மெத்தை, தலையணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரத்தில் உள்ள ராம்கோ சிமென்ட் நிறுவனம், பெரு நிறுவன சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகள், சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு அடிப்படை வசதிகள், நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் வேண்டுகோளின் பேரில், பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, ரூ .1.50 லட்சம் செலவில், 20 படுக்கைகள், மெத்தை, தலையணைகளை ராம்கோ சிமென்ட் நிறுவனம் புதன்கிழமை வழங்கியது. ராம்கோ நிறுவன முதுநிலை பொது மேலாளா் லட்சுமணன், கணக்குத் துறை மேலாளா் சுரேஷ்குமாா், பணியாளா் துறை அலுவலா்கள் மணிவேல், முனியசாமி, சீனிவாசன் ஆகியோா், பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலத்திடம் ஒப்படைத்தனா்.

மருத்துவா் திவ்யபாரதி, வட்டார சுகாதார ஆய்வாளா் சீனிவாசன் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com