அதிமுக ஆண்டுவிழா நிகழ்ச்சி: சொந்த ஊரில் கொடியேற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆண்டுவிழா நிகழ்ச்சியினை ஒட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை காலை தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியினை ஏற்றி வைத்து நிகழ்வினை தொடங்கி வைக்கவுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆண்டுவிழா நிகழ்ச்சியினை ஒட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை காலை தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியினை ஏற்றி வைத்து நிகழ்வினை தொடங்கி வைக்கவுள்ளார்.

கடந்த 1972 அக்டோபர் 17 அன்று, மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி. ராமசந்திரனால் தொடங்கபட்ட அஇஅதிமுக 48 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 49 ஆம் ஆண்டு துவக்கவிழா நிகழ்வினை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், எடப்பாடி ஒன்றியம் சிலுவம்பாளைம் பகுதியில் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில், தமிழக முதல்வரும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான, எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு கட்சிக்கொடியினை ஏற்றிவைத்து, அ.தி.மு.கவினர் மத்தியில் சிறப்புரையாற்ற உள்ளதாக, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முதல்வர் கொடி ஏற்ற உள்ள அப்பகுதியில், நடைபெற உள்ள விழாவிற்கான முன்னேற்பாடுகளை, எடப்பாடி ஒன்றிய பகுதி அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com