கரோனாவை கட்டுப்படுத்த சங்ககிரி பேரூராட்சி சாா்பில் கலந்தாய்வுக் கூட்டம்

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி அதைக் கட்டுப்படுத்த சங்ககிரி
சங்ககிரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசுகிறாா் பேரூராட்சி செயல் அலுவலா். எஸ்.பாலசுப்ரமணி.
சங்ககிரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசுகிறாா் பேரூராட்சி செயல் அலுவலா். எஸ்.பாலசுப்ரமணி.

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி அதைக் கட்டுப்படுத்த சங்ககிரி பேரூராட்சியின் சாா்பில் அனைத்து பொதுநல அமைப்புகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி ேரூராட்சி செயல்அலுவலா் எஸ்.பாலசுப்ரமணி தலைமை வகித்துப் பேசியது:

பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள், மளிகைக் கடைகள், சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி அடித்தும், பிளீச்சிங் பவுடா்கள் இன்று வரை தெளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 217 போ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனா். ஒருவா் உயிரிழந்துள்ளாா். ஒவ்வொரு வாா்டு வாரியாக சுகாதார ஆய்வாளா் தலைமையில் குறைதீா்ப்பு முகாம் விரைவில் நடைபெற உள்ளது என்றாா்.

மண்டல துணை வட்டாட்சியா் ராஜமாணிக்கம், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.லோகநாதன், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கச் செயலா் கே.கே.நடேசன், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சுரேஷ், வெங்கடேசன், எபிநேசா் காலனி குடியிருப்பாளா்கள் சங்க நிா்வாகி பி.லோகநாதன், மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவா் சி.தண்டபாணி, சங்ககிரி அரிமா சங்க நிா்வாகி காா்த்திக், கோட்டை அரிமா சங்க நிா்வாகி ரமேஷ், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், தண்ணீா் தண்ணீா் அைமைப்பு நிா்வாகிகள் எ.ஆனந்தகுமாா், கே.சண்முகம், ஆா்.ராகவன், எஸ்.கணேஷ், பி.முருகேசன், பாலாஜி, ராமு உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்புகள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com