சங்ககிரி வஸந்தவல்லி உடனமர் வஸந்தவல்லபராய பெருமாள் கோயிலில் நவராத்தி விழா தொடக்கம் 

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லி உடனமர் வஸந்தவல்லபராய பெருமாள் கோயிலில் நவராத்தி விழா சனிக்கிழமை தொடங்கியது. 
ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை மாலை தொடங்கிய நவராத்திரி சிறப்பு பூஜையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுவாமி கொலு பொம்மைகள்.
ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை மாலை தொடங்கிய நவராத்திரி சிறப்பு பூஜையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுவாமி கொலு பொம்மைகள்.

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லி உடனமர் வஸந்தவல்லபராய பெருமாள் கோயிலில் நவராத்தி விழா சனிக்கிழமை தொடங்கியது. 

சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ளஅருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி கோயில், மங்கமலையில் உள்ள அருள்மிகு மங்கமலைபெருமாள், ஒருக்காமலையில் உள்ள  குடவரையில் பெருமாளின் திருநாமங்களான பாதங்கள், சங்கு, சக்கரம் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமைகளில் நேரடியாக கோயிலுக்கு சென்று வழிபடாத பக்தர்கள் புரட்டாசி மாத கடை சனிக்கிழமையையொட்டி கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.  

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு சனிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். 
 

அதிகமான பக்தர்கள் கோயில்களில் தீர்த்தங்களையும், பொங்கல்களையும் பெற்றுச்சென்று புரட்டாசி மாத விரதங்களை பூர்த்தி செய்தனர். சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள வஸந்தவல்லபராய பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

வி.என்.பாளையம் பெருமாள் கோயிலில் நவராத்தி தொடக்கம் 

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லி உடனமர் வஸந்தவல்லபராய பெருமாள் கோயிலில் நவராத்தி தொடக்கத்தினையொட்டி மூலவர் சுவாமிகளுக்கு பால், தயிர், திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்யபொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

அதனையடுத்து கோயில் வளாகத்தில் சனிக்கிழமை  மாலை பல்வேறு சுவாமி சிலைகள் கொண்ட நவராத்தி கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு லஷ்சுமி தேவியின் பக்தி பாடல்களை பாடி வழிப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com