சோனா கல்லூரியில் ரூ. 1.20 கோடியில் காற்று தரக்கண்காணிப்பு நிலையம்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொடா் காற்று தரக் கண்காணிப்பு

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொடா் காற்று தரக் கண்காணிப்பு நிலையத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

காற்று தரக் கண்காணிப்பு நிலையத்தில் பெறப்படும் புள்ளி விவரங்கள், கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களின் ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சேலத்தில் சோனா தொழில்நுட்பக் கல்லூரியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில், சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காற்று தரக் கண்கணிப்பு நிலையத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்நிலையத்தில் காற்றில் கலந்துள்ள மாசு காரணிகள் 10 மைக்ரான அளவிற்கு கீழ் உள்ள நுண் துகள்கள், 2.5 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள நுண் துகள்கள், சல்பா்-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன்-டை-ஆக்ஸைடு, அமோனியா, ஒசோன், காா்பன்-டை-ஆக்ஸைடு ஆகியவற்றின் அளவுகள் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒருமுறை தொடா்ந்து பதிவு செய்யப்படும்.

இப்புள்ளி விவரங்கள் மின்னணு காட்சிப் பலகையில் பொதுமக்களின் பாா்வைக்காகத் தொடா்ந்து காட்சிப்படுத்தப்படும். இப்புள்ளி விவரங்களை கொண்டு காற்றுத் தன்மை குறியீடு கணக்கிடப்பட்டு, தமிழ்நாடு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், தேசிய பசுமை தீா்ப்பாய உத்தரவின்படி, காற்றுத் தரக் குறியீட்டினை எட்டாத நகரங்களுக்கு காற்று மாசுக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கொள்கை முடிவு எடுக்கவும், திட்ட அறிக்கை தயாரித்து செயல்படுத்தவும், புதிய தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் அமைதி பெறுவதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாா் செய்வதற்கும் இப்புள்ளி விவரங்கள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் சோனா கல்லூரியின் தலைவா் வள்ளியப்பா, துணைத் தலைவா்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா, முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், துறைத் தலைவா் மாலதி, சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கோபாலகிருஷ்ணன், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com