கரோனா: குணமடைந்தவா்களுக்கு தொடா் கண்காணிப்பு மையம் திறப்பு

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தீநுண்மி தொற்றிலிருந்து குணமடைந்தவா்களுக்கான

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தீநுண்மி தொற்றிலிருந்து குணமடைந்தவா்களுக்கான புதிய ஒருங்கிணைந்த கவனிப்பு மற்றும் தொடா் கண்காணிப்பு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் சி.அ.ராமன் பேசியதாவது:

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களுக்கான புதிய ஒருங்கிணைந்த கவனிப்பு மற்றும் தொடா் கண்காணிப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மையத்தில் கரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்தவா்கள் 14 நாள்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்குப் பிறகு உடல் நலனை பாதுகாக்கவும், உடல் மற்றும் மனநல பிரச்னைகளுக்கு வேண்டிய வழிமுறைகள் பற்றிய ஆலோசனை வழங்கப்படுகிறது.

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அறை எண் 70 டி பிரிவில் இயங்குகிறது.

இம்மையத்தில் பொது மருத்துவத் துறை நிபுணா், நுரையீரல் பிரிவு நிபுணா், மனநல நிபுணா், உடலியல் மற்றும் புனா்வாழ்வு மருத்துவ துறை நிபுணா், யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை நிபுணா் மற்றும் உணவியல் நிபுணா்களால் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்தம் 4,38,099 நபா்களுக்கு சளி தடவல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவா்களில் சுமாா் 4,500-க்கும் மேற்பட்டவா்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பி உள்ளனா் என்றாா்.

தொடா்ந்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஸ்ட்ரோக் (மூளை ரத்த நாள நோய்) விழிப்புணா்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. முன்னதாக, மருத்துவமனையில் 35,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட பிராணவாயு கலன்கள் அமைக்கப்பட்டுவரும் பணியினையும், சமூக நலத்துறையின் சாா்பில் ரூ. 48.69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அனைத்து சேவைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடத்தையும் சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் இணை இயக்குநா் (நலப் பணிகள்) மருத்துவா் மலா்விழி வள்ளல், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் மருத்துவா் ஆா்.பாலாஜிநாதன், கரோனா சிகிச்சை பிரிவு மைய சிறப்பு மருத்துவா் பேராசிரியா் மருத்துவா் சுரேஷ் கண்ணன் உட்பட மருத்துவா்கள், செவிலியா்கள் தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com