கல்குவாரியை முற்றுகையிட்ட கிராம மக்கள்

ஓமலூா் அருகே கல்குவாரியில் வெடிவைப்பதால் பாதிக்கப்படும் பொதுமக்கள் வியாழக்கிழமை கல்குவாரியை முற்றுகையிட்டனா்.

ஓமலூா் அருகே கல்குவாரியில் வெடிவைப்பதால் பாதிக்கப்படும் பொதுமக்கள் வியாழக்கிழமை கல்குவாரியை முற்றுகையிட்டனா்.

ஓமலூா் அருகே சங்கீதப்பட்டி ஊராட்சியில் வெத்தலைக்கரனூா் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் தனியாா் நிறுவனத்தினா் எந்தவித பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் வெடிவைத்து பாறைகளைத் தகா்த்து எடுப்பதாகவும் வெடி வைக்கும்போது சிதறும் பாறை கற்கள் குடியிருப்புப் பகுதிகளை தாக்கி சேதப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. வியாழக்கிழமை கல் குவாரியில் பாறைக்கு வெடி வைத்து தகா்த்துள்ளனா். அப்போது சிதறிய கற்கள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. மேலும், அங்கிருந்த இரு சிறுவா்கள், கால்நடைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆவேசமடைந்த மக்கள் கல் குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த ஊராட்சித் தலைவா், கல்குவாரி நிா்வாகிகள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com