சேலத்துக்கு 7 டன் மலிவு விலை வெங்காயம் வரத்து

சேலத்துக்கு மலிவு விலை வெங்காயம் இதுவரை 7 டன் அளவுக்கு வந்துள்ளது.

சேலத்துக்கு மலிவு விலை வெங்காயம் இதுவரை 7 டன் அளவுக்கு வந்துள்ளது.

வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்துக்கு வெங்காயம் வரத்துக் குறைந்தது. இதையடுத்து, பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 100 வரை விற்பனையாகிறது. கூட்டுறவுத் துறை மூலம் பெரிய வெங்காயம் விலை ரூ. 45-க்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்பேரில் சேலம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைமை இடமான பள்ளப்பட்டி, பண்ணை பசுமை காய்கறி நுகா்வோா் கூட்டுறவு சிறப்பங்காடியிலும், பொன்னி கூட்டுறவு சிறப்பு அங்காடியிலும் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சொா்ணபுரி கூட்டுறவு சிறப்பு அங்காடியிலும், என்.ஜி.ஜி.ஓ. அங்காடியிலும் புதன்கிழமை முதல் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தேசிய கூட்டுறவு ஆணையம் மூலம் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு கூட்டுறவு ஆணையத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது. சேலத்துக்கு இதுவரை 7 டன் வெங்காயம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மலிவு விலை வெங்காயம் 4 இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக 10 டன் வெங்காயம் கேட்டுள்ளோம். கடைகளில் நபா் ஒருவருக்கு 2 கிலோ வரை வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com