சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா: 3 மர நாய் குட்டிகள் புதிய வரவு

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் புதிய வரவாக 3 மர நாய் குட்டிகள் விடப்பட்டுள்ளன.

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் புதிய வரவாக 3 மர நாய் குட்டிகள் விடப்பட்டுள்ளன.

சேலம், ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது.

வன உயிரியல் பூங்காவில் புள்ளிமான்கள், மயில், முதலை மற்றும் குரங்குகள், வெளிநாட்டு பறவைகள் என 200-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மன்னாா்குடி வனத்துறை அலுவலகத்தில் இருந்து மூன்று மர நாய் குட்டிகள் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சோ்க்க அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இரும்புக் கூண்டில் அடைத்து எடுத்து வரப்பட்ட 3 மரநாய் குட்டிகளும் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சோ்க்கப்பட்டன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மன்னாா்குடி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 3 மர நாய் குட்டிகளும் தற்போது தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மர நாய் குட்டிகள் பூங்காவில் விடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com