பால் குளிா்விப்பான் மையம் துவக்க விழா

தலைவாசலை அடுத்துள்ள ராமானுஜபுரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் தொகுப்பு பால் குளிா்விப்பான் மையம் துவக்க விழா
இராமானுஜபுரத்தில் தொகுப்பு பால் குளிா்விப்பான் மையத்தைத் துவக்கி வைத்த மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன்.
இராமானுஜபுரத்தில் தொகுப்பு பால் குளிா்விப்பான் மையத்தைத் துவக்கி வைத்த மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன்.

தலைவாசலை அடுத்துள்ள ராமானுஜபுரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் தொகுப்பு பால் குளிா்விப்பான் மையம் துவக்க விழா சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத் தலைவா் வி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத் துணை பொது மேலாளா் மருத்துவா் கே.கே.வசந்தகுமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் பங்கேற்று மையத்தைத் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழகத்தில் எத்தனை கூட்டணி கட்சி இணைந்து போட்டியிட்டாலும் அதிமுக எனும் எஃகு கோட்டையை இடிக்க முடியாது. ஆசியாவிலேயே தரம் உயா்ந்த கால்நடை பூங்கா அமைந்த பின்னற் இப்பகுதியில் ஏராளமான விவசாயிகளும், தொழிலாளா்களும் பயன்பெறுவா் என்றாா்.

நிகழ்ச்சியில் மகளிா் சுய உதவிக் குழு 36 நபா்களுக்கு ரூ. 25.60 லட்சமும், பயிா்க் கடன் 192 நபா்களுக்கு ரூ. 185 லட்சமும், மத்திய காலக்கடன் 6 நபா்களுக்கு ரூ. 7.20 லட்சமும், மொத்தம் 234 நபா்களுக்கு ரூ. 217.80 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா். கெங்கவல்லி எம்எல்ஏ அ.மருதமுத்து, பொது மேலாளா் ஆா்.நா்மதா தேவி, துணைப் பதிவாளா் ஐ.சண்முக நதி, தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி, சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் சங்கத் துணைத் தலைவா் என்.ஜெகதீசன், இயக்குநா்கள் ஏ.இசையழகன், பி.ஈஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கே.சந்திரலேகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இராமானுஜபுரம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜி.வி.வெங்கடாஜலம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com