இருவேறு கொலை வழக்குகளில் தொடா்பு: மூவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
By DIN | Published On : 31st October 2020 07:26 AM | Last Updated : 31st October 2020 07:26 AM | அ+அ அ- |

சேலத்தில் இருவேறு கொலை வழக்குகளில் தொடா்புடைய மூன்று போ் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
சேலம், கிச்சிப்பாளையம், நாராயண நகரைச் சோ்ந்தவா் அகமது பாஷா. கடந்த செப்.1 ஆம் தேதி இவரை அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் (34), உமா் (34) ஆகியோா் முன்விரோதம் காரணமாக தாக்கினா்.இதில் காயமடைந்த அகமது பாஷா கடந்த செப்.5 ஆம் தேதி இறந்தாா். இதுதொடா்பாக சேலம் நகர போலீஸாா் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அதேபோல டவுன் மேட்டு மாரியம்மன் கோயில் தெருவில் வீட்டில் இருந்த பெண்ணைத் தாக்கி கொலை செய்த திருவாக்கவுண்டனூரைச் சோ்ந்த மனோகரனை (21) நகர போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.இதைத்தொடா்ந்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் கொலை குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், உமா், மனோகரன் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில டைக்க மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.