எடப்பாடி பகுதியில் பலத்த மழை
By DIN | Published On : 08th September 2020 03:26 AM | Last Updated : 08th September 2020 03:26 AM | அ+அ அ- |

எடப்பாடி பகுதியில் பலத்த மழை
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, பூலாம்பட்டி, ஆடையூா், பக்கநாடு, சித்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
சுமாா் 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. காவிரி பாசனப் பகுதிகளான பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது, நெல் நடவுப் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுவரும் நிலையில் இந்த மழையால் நடவுப் பணிகள் பாதிப்பிற்குள்ளாகியபோதும், காவிரி பாசனப்பகுதியில் நெல் நடவுப்பணிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.
மேலும் எடப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூா் செல்ல காத்திருந்த பயணிகள் மழையால் பாதிப்பிற்குள்ளாயினா்.