கோனேரிப்பட்டியில் ரூ. 7 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில் சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதன்கிழமை ரூ. 7 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில் சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதன்கிழமை ரூ. 7 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில், கோனேரிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க மையத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் நெடுங்குளம், கல்வடங்கம், பொன்னம்பாளையம், காவேரிப்பட்டி, பூதப்பாடி, ஊமாரெட்டியூா், வெள்ளித்திருப்பூா், கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் நாமக்கல், சேலம், திருப்பூா் மாவட்ட வியாபாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 600 மூட்டைகள் 250 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, நடைபெற்ற ஏலத்தில் ரூ. 7 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது. இதில் பிடி ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.4,290, அதிகபட்ச விலையாக ரூ.4,890-க்கும் விற்பனையாகியது.

கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் மொத்தத்தில் 150 மூட்டை பருத்தி வரத்து குறைந்தது. குறைந்தபட்ச விலையில் கடந்த வாரத்தைவிட இந்த வாரத்தில் ரூ.70 குறைவாகவும், அதிகபட்ச விலையில் ரூ.160 அதிகரித்தும் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com