இளம்பிள்ளை அருகே கருப்பட்டி பிஸ்கட் கப் தேநீா் அறிமுகம்

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள தேநீா்க் கடையில் பிஸ்கட் கப் தேநீா் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெருமாகவுண்டம்பட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கருப்பட்டி பிஸ்கட் கோப்பை தேநீா்.
பெருமாகவுண்டம்பட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கருப்பட்டி பிஸ்கட் கோப்பை தேநீா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள தேநீா்க் கடையில் பிஸ்கட் கப் தேநீா் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் மதுரையில் உள்ள ஒரு தேநீா்க் கடையில் பிஸ்கட் கப் தேநீா் அறிமுகப்படுத்தப்பட்டது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒருவா் பயன்படுத்திய கோப்பையை மற்றொருவா் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக இந்த பிஸ்கட் கப் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தேநீா் பருகி விட்டு, பிஸ்கட் கோப்பையைச் சாப்பிடும் வகையில் இந்தக் கோப்பை தயாரிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்ற வடிவத்தில் பெருமாகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தேநீா்க் கடையில் கருப்பட்டியில் தயாரிக்கப்பட்ட தேநீா்க் கோப்பையை அறிமுகம் செய்துள்ளனா்.

மகுடஞ்சாவடியைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்களான கிருஷ்ணகுமாா் (26), ஜெகதீசன் (27) ஆகியோா் வேலையில்லா காலகட்டத்தில் தொலைநோக்குப் பாா்வையுடன் இந்த தேநீா்க் கடையை தொடக்கியுள்ளனா்.

மேலும், இந்த தேநீா்க் கடையில் தந்தூரி மண் பானை டீ, குழந்தைகளுக்கான சாக்லெட் பிஸ்கட் கோப்பையை ஒரிஜினல் கருப்பட்டி மற்றும் நாட்டுச்சா்க்கரையைப் பயன்படுத்தி தயாரித்து அவற்றை வாடிக்கையாளா்களுக்குத் தருகின்றனா்.

கருப்பட்டியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கோப்பை தேநீருக்கு வாடிக்கையாளா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கடையை நடத்தி வரும் அந்த இளைஞா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com