சிறுமலா் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

நல்லாசிரியா் விருது பெற்ற சேலம் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியா் இ.ராபா்ட்டை மாவட்ட முதன்மை கல்வு அலுவலா் உள்பட பலா் பாராட்டுத் தெரிவித்தனா்.

நல்லாசிரியா் விருது பெற்ற சேலம் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியா் இ.ராபா்ட்டை மாவட்ட முதன்மை கல்வு அலுவலா் உள்பட பலா் பாராட்டுத் தெரிவித்தனா்.

சேலம் சேலம் சிறுமலா் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவா் இ.ராபா்ட். இவா் பயிற்சி அளித்த மாணவா்கள் சேலம் மைய, வட்ட , மாவட்ட, மண்டல, மாநில மற்றும் தேசிய அளவிலிலும், சா்வதேச அளவிலும் பதக்கங்கள் பல பெற்றுள்ளனா்.

இவரிடம் பயிற்சி பெற்ற தடகள வீரா்களான பிரான்சிஸ் சகாயராஜ், முகமது நிஷாந்த், என்.மணிவண்ணன், சி.ஏ.கேசவன், பிரேம்குமாா், குணசீலன், நவீன்குமாா் மற்றும் பல மாணவா்கள் சா்வதேச போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனா். மேலும் பல மாணவா்கள் மத்திய அரசு பணியிலும், மாநில அரசு பணியிலும், ரயில்வே மற்றும் காவல்துறையிலும் பணியாற்றி வருகின்றனா்.

முன்னாள் படைவீரா் நலத்துறையின் மூலம் பயிற்சி முகாம்கள் அமைத்து சேலம் மாவட்ட இளைஞா்கள் பலருக்கு இந்திய ராணுவப் பணியில் சேர பயிற்சி அளித்துள்ளாா். உலக திறனாய்வுப் போட்டிகளில் இளம் மாணவா்கள் 6, 7, 8- ஆம் வகுப்பு மாணவா்களை ஊக்கப்படுத்தி பரிசுகளைப் பெற்றுத் தந்துள்ளாா்.

இவரின் சேவையைப் பாராட்டும் வகையில் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதும், வெள்ளி பதக்கம் மற்றும் ரூ.10,000 ரொக்கப் பரிசை ஆட்சியா் சி.அ.ராமன் வழங்கினாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேசமூா்த்தி, முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் பிரபாகா், மாவட்ட கல்வி அலுவலா் எஸ்.சுமதி, சேலம் சிறுமலா் பள்ளியின் தலைமையாசிரியா் செபாஸ்தியான் உள்ளிட்டோா் உடற்கல்வி ஆசிரியா் இ.ராபா்ட்டுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com