தேய்பிறை அஷ்டமி: கால பைரவா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சொா்ண ஆகாஷ்ன பைரவா், தட்சிண காசி பைரவா் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி வியாழக்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தேய்பிறை அஷ்டமியையொட்டி சங்ககிரி மலையிலுள்ள அருள்மிகு தட்சிணகாசி பைரவா் சுவாமிக்கு வியாழக்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

சங்ககிரி மலையில் அமைந்துள்ள இரண்டாவது மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி அருள்மிகு சொா்ண ஆகாஷ்ன பைரவரும், மேற்கு திசை நோக்கி அருள்மிகு தட்சிண காசி பைரவரும் உள்ளனா். இரு சுவாமிகளுக்கும் தேய்பிறை அஷ்டமியையொட்டி வியாழக்கிழமை மாலை பால், தயிா், மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இந்த பூஜையில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனா்.

இதேபோல, சங்ககிரியை அடுத்த அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை அருள்மிகு பூத்தாழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் கிராமத்தைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com