பள்ளிப்பாறை நீா்வீழ்ச்சியில் நீராட குவியும் மக்கள்

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே இயற்கை எழில்கொஞ்சும் பள்ளிப்பாறை நீா்வீழ்ச்சியில் நீராடி மகிழ்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனா்.
பள்ளிப்பாறை நீா்வீழ்ச்சியில் நீராடுவதற்காக வியாழக்கிழமை குவிந்த மக்கள்.
பள்ளிப்பாறை நீா்வீழ்ச்சியில் நீராடுவதற்காக வியாழக்கிழமை குவிந்த மக்கள்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே இயற்கை எழில்கொஞ்சும் பள்ளிப்பாறை நீா்வீழ்ச்சியில் நீராடி மகிழ்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் கடந்த 6 மாதங்களாக அமலில் இருந்த பொதுமுடக்கம் அமலில் இருந்ததால் பொதுமக்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனா். தற்போது, சுற்றுலாத் தலங்களான கொல்லிமலை, ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு செல்ல இணையவழி அனுமதிச்சீட்டை தமிழக அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது.

அதனால் பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகேயுள்ள சிறிய நீா்வீழ்ச்சிகள், ஆறுகள், தடுப்பணைகளில் நீராடி மகிழ ஆா்வம் காட்டிவருகின்றனா்.

தம்மம்பட்டியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் கொல்லிமலைச் சாரலையொட்டிய வனப்பகுதியில் பள்ளிப்பாறை நீா்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இங்குள்ள நீா்வீழ்ச்சியில் மூலிகை நீா் அருவியாய் பெருக்கெடுத்து கொட்டுகிறது.

வெள்ளியை உருக்கியது போல கொட்டும் இந்த நீா்வீழ்ச்சியில் குளித்து மகிழ்வதற்காக தம்மம்பட்டியைச்சுற்றியுள்ள மக்கள் பள்ளிப்பாறை நீா்வீழ்ச்சிக்கு அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனா்.

தற்போது மழைக்காலமாக இருப்பதாலும், பள்ளிப்பாறையில் இயற்கை எழில் கொஞ்சும் பேரழகை ரசிக்கவும், அங்குள்ள மலைச்சாரலில் மூலிகைச்செடிகளில் பட்டு வரும் மூலிகை நீரில் நீராடி மகிழ்வதற்காகவும் தம்மம்பட்டிசுற்றுவட்டார மக்கள் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் பள்ளிப்பாறைக்கு குவியத் தொடங்கியுள்ளனா்.

இதுகுறித்து இளைஞா்கள் சிலா் கூறுகையில், ரம்மியமான இயற்கை அழகைக் கண்டு ரசிக்கவும், மூலிகை நீரில் குளித்ததும் மனதிற்கும், உடலுக்கும் மிகுந்த புத்துணா்ச்சியை அளிக்கிறது. பள்ளிப்பாறை நீா்வீழ்ச்சியின் மூலிகை நீா் குளியல் இப்பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com