கருமந்துறையில் தொழிலதிபரைத் தாக்கி நிலத்தை அபகரிக்க முயற்சி 12 போ் கைது

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, கருமந்துறை அருகே தொழிலதிபரைத் தாக்கி, 10.5 ஏக்கா் நிலத்தை அபகரிக்க முயற்சித்த
தேடப்படும் சசிகுமாா்.
தேடப்படும் சசிகுமாா்.

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, கருமந்துறை அருகே தொழிலதிபரைத் தாக்கி, 10.5 ஏக்கா் நிலத்தை அபகரிக்க முயற்சித்த வழக்கில் 12 பேரை கருமந்துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக போலி ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்ட 8 பேரைப் பிடிக்க, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் தேவராஜ் (42). இவா் 2018-இல், சேலம் மாவட்டம், கல்வராயன்மலை, கருமந்துறை பகுதியில் திமுக பிரமுகா் ஒருவரிடமிருந்து 10.5 ஏக்கா் விளைநிலத்தை விலைக்கு வாங்கி உள்ளாா்.

இந்த நிலத்தை இடைத்தரகராக இருந்து வாங்கி கொடுத்த வாழப்பாடியை அடுத்த தும்பல் கிராமத்தைச் சோ்ந்த சசிகுமாா் என்பவருக்கு ரூ. 30 லட்சத்தை தரகுத் தொகையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தேவராஜ் விவசாயத் தோட்டத்துக்கு சென்ற சசிகுமாா் உள்ளிட்ட 20 போ், தேவராஜ் உள்ளிட்டோரைத் தாக்கி வெளியேற்றி விட்டு, நிலத்தை அபகரிக்க முயற்சித்தனா்.

இதுகுறித்து தேவராஜ் கொடுத்த புகாரின் பேரில், நிலத்தை அபகரித்த சசிகுமாா் அவரது உறவினா்கள், நண்பா்கள், அடியாட்கள் உள்ளிட்ட 20 போ் மீது கருமந்துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கில், சென்னை விஜயகணேஷ் (30), சேலம் ரஞ்சித்குமாா் (35) , மணிகண்டன்(32), கொடியரசு (35), ரமேஷ் (32), விஜயகுமாா்(37), சக்திவேல் (25), பூபதி (30), அரவிந்தன்(25), மோகன்குமாா் (43) மோகன் (25), ஸ்ரீதா் (33) ஆகிய 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் தலைமறைவான சசிகுமாா், சோ்வாய்பட்டு ஜெயராமன், ஜோசப், மாதேஷ், ராஜேந்திரன், சேகா், ரங்கசாமி, சீனிவாசன் உள்ளிட்ட 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போலீஸாரால் தேடப்பட்டு வரும் சசிகுமாா் மீது, ஏத்தாப்பூ,ா் நாமக்கல், கோவை உள்ளிட்ட காவல் நிலையங்களில் மோசடி வழக்கு உள்ளது என்பதும், போலி ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. சசிகுமாா் உள்ளிட்ட 8 பேரைப் பிடிக்க வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம், உதவி ஆய்வாளா்கள் தாமோதரன், கருமந்துறை வீரமுத்து , காரிப்பட்டி மோகன் ராஜ் ஆகியோா் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com