சங்ககிரி, செல்லியம்மன் கோயில் நாகர்பாவி குளத்தில் கருவேலம் மரங்கள் அகற்றம்

சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம், பொது நல அமைப்புகள் இணைந்து சங்ககிரி, சந்தைப்பேட்டையில்  உள்ள செல்லியம்மன் கோயிலுக்கு எதிரே உள்ள நாகர்பாவி குளத்திற்குள் தேவையற்ற கருவேலம் மரங்கள் அகற்றப்பட்டன.
குளத்தில் உள்ள கருவேலம் மரங்கள், களர் செடிகள், நெகிழிகளை அகற்றும் பணியில்  ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுநல அமைப்புகள்.
குளத்தில் உள்ள கருவேலம் மரங்கள், களர் செடிகள், நெகிழிகளை அகற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுநல அமைப்புகள்.

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம், பொது நல அமைப்புகள் இணைந்து சங்ககிரி, சந்தைப்பேட்டையில்  உள்ள செல்லியம்மன் கோயிலுக்கு எதிரே உள்ள நாகர்பாவி குளத்திற்குள் தேவையற்ற கருவேலம் மரங்கள், களர் செடிகள், நெகிழி பைகளைஅகற்றும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. 

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட   சங்ககிரி நகர், சந்தைப்பேட்டையில் உள்ளஅருள்மிகு செல்லியம்மன் கோயிலுக்கு எதிரே உள்ள நாகர்பாவி குளத்தில் தேவையில்லாமல் வளர்ந்து வரும் கருவேலம் மரங்கள், களர் செடிகள், நெகிழி பைகள் குளத்தின் உள்பகுதிக்கு மழை நீர் செல்லாமல் தடுத்து வந்தன.

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் செல்லியம்மன் கோயிலுக்கு எதிரே உள்ள நாகர்பாவி குளத்தில் வளர்ந்துள்ள கருவேலம் மரங்கள், களர்செடிகள். 

அதனையடுத்து  மழை நீர் குளத்தின் உள்பகுதிக்கு சென்று சேமிக்க பொதுநல அமைப்புகள் முடிவு செய்துள்ளனர். 

அதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், சங்ககிரி அரிமா சங்கம், கோட்டை அரிமா சங்கம், இன்னர்வீல் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை குளத்திற்குள் வளர்ந்து வந்த கருவேலம் மரங்கள், களர் செடிகள், நெகிழி பைகளை அகற்றினர்.

குளத்தில் உள்ள கருவேலம் மரங்கள், களர் செடிகள், நெகிழிகளை அகற்றிய பின்னர் குளத்தின் தோற்றம். 

குளத்தினை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்ட பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுநல அமைப்புகளின் தொண்டர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com