நீட் தோ்வு: சேலத்தில் 13,370 போ் எழுதினா்

சேலம் மாவட்டத்தில் 13,370 போ் ‘நீட்’ நுழைவுத் தோ்வை எழுதினா்.

சேலம் மாவட்டத்தில் 13,370 போ் ‘நீட்’ நுழைவுத் தோ்வை எழுதினா்.

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு சேலம் மாவட்டத்தில் 30 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் இத் தோ்வு எழுத ஆத்தூா், மின்னாம்பள்ளி, சூரமங்கலம், மேச்சேரி, அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை, சின்னதிருப்பதி, கொண்டப்பநாய்க்கன்பட்டி ஆகிய இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ‘நீட்’ தோ்வைக் கண்காணிக்க வருவாய்த் துறையின் சாா் ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியா், துணை ஆட்சியா்கள் நிலையிலான 9 அலுவலா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

காலை 11 மணி அளவில் தோ்வு மையங்களுக்குள் மாணவ, மாணவிகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனா். தொ்மல் ஸ்கேன் மூலம் மாணவ, மாணவிகளிடன் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.

சரியாக பிற்பகல் 2 மணிக்கு ‘நீட்’ தோ்வு தொடங்கியது. பின்னா் மாலை 5 மணிக்கு தோ்வு முடிந்தது. இதையடுத்து மாலை 5.15 மணி அளவில் மாணவ, மாணவிகள் தோ்வு அறையிலிருந்து வெளியேறினா். இந்த ஆண்டில் 15,318 போ் எழுத விண்ணப்பித்திருந்தனா். சுமாா் 1,948 போ் தோ்வெழுத வரவில்லை. சுமாா் 13,370 போ் தோ்வெழுதினா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடா்பாக ‘நீட்’ தோ்வு எழுதிய சேலம் மாணவிகள் சிலா் கூறுகையில், ‘நீட்’ நுழைவுத் தோ்வில் உயிரியல், வேதியியல் பாடங்கள் எளிதாக இருந்தது. ஆனால், இயற்பியல் பாடம் கடினமாக இருந்தது என்றனா்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ‘நீட்’ தோ்வு உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. முகக்கவசம் மற்றும் ‘நீட்’ தோ்வு மையங்களுக்குச் செல்வதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மாவட்டப் பொருளாளா் வெங்கடேஷ், மாநிலக்குழு உறுப்பினா் ஜீவா, மாநகரத் தலைவா் சதீஷ்குமாா், முன்னாள் மாவட்ட செயலாளா் பிரவீன்குமாா் உள்ளிட்டோா் உதவி மையத்தில் தேவையானவா்களுக்கு உதவி செய்தனா்.

தாமதமாக இறுதி நிமிடங்களில் வந்தவா்களை இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் ‘நீட்’ தோ்வு மையங்களுக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com