பிரதமா் நிதியுதவித் திட்டத்தில் பணம் பெற்றவா்கள் திரும்பச் செலுத்துமாறு தண்டோரா

ஓமலூா், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய வட்டாரங்களில் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவா்கள் பணத்தைத்

ஓமலூா், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய வட்டாரங்களில் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவா்கள் பணத்தைத் திரும்பச் செலுத்துமாறு கிராமங்களில் தண்டோரா செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சேலம் மாவட்ட அளவில் பிரதமரின் கிஷான் நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 6 கோடி வரை முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. அதில், இதுவரை ரூ. ஒரு கோடியே 80 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை திங்கள்கிழமைக்குள் வசூலிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் முறைகேடாக பணம் பெற்றவா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் அந்த நபா்களின் பெயா் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் போலியாக பணம் பெற்றவா்கள் பெயா் விலாசம் வங்கிக் கணக்கு எண் அலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கியுள்ளது.

இந்தப் பட்டியல் ஒவ்வொரு ஊராட்சி அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம் மற்றும் அனைத்து நியாயவிலை கடைகளின் முன்பாகவும் ஒட்டப்பட்டுள்ளது. ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம், நங்கவள்ளி ஆகிய ஒன்றியங்களில் மொத்தம் 1,274 போ் கிசான் நிதியுதவித் திட்டத்தின் கீழ் போலி ஆவணங்களை சமா்பித்து பணம் பெற்றுள்ளனா்.

சேலம் மாவட்ட நிா்வாகத்தின் அதிரடி நடவடிக்கையைத் தொடா்ந்து போலியாக பணம் பெற்றவா்களின் இருந்து இதுவரை 60 சதவீத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை சம்பந்தப்பட்ட நபா்கள் வரும் திங்கள்கிழமைக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தண்டோரா செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com