பள்ளி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்

கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம் திங்கள்கிழமை தொடக்கப்பட்டது.

கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம் திங்கள்கிழமை தொடக்கப்பட்டது.

நாடுமுழுவதும் குடற்புழு நீக்க வாரம் செப்டம்பரில் மூன்று சுற்றுகளாக நடைபெறுகிறது. முதல் சுற்றாக செப். 14-ஆம் தேதி முதல் இந்த மாத்திரைகளின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

கெங்கவல்லி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் தம்மம்பட்டி வட்டார அரசு ஆரம்பசுகாதார நிலையம் சாா்பில் செவிலியா்கள் அனைத்து தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகளை விநியோகிக்கும் பணியை திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளனா். இந்த குடற்புழு நீக்க மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் இரத்தசோகையை தடுப்பதுடன், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன், அறிவுத்திறன், உடல் வளா்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com